width:1772px height:1260px மேலாண்மை செய்திகள்

தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்..!!




 சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 7332 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்னை மரங்கள் அதிகமாக உள்ள வட்டாரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் தென்படுகிறது.

 இந்த ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களானது தென்னை மரங்கள் மட்டுமல்லாது வாழை, சப்போட்டா பயிர்களையும் தாக்குகிறது.

 எனவே அவற்றை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலிதீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 10 எண்ணிக்கையில், 10 அடி உயரத்தில் இரண்டு மரங்களுக்கிடையே கட்ட வேண்டும்.

 மஞ்சள் நிற விளக்குப்பொறிகள் ஏக்கருக்கு இரண்டு வீதம் தென்னந்தோப்புகளில் வைத்து அவற்றை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலம் வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்.

 தாக்குதல் ஏற்பட்டுள்ள தென்னை மரங்களின் மீது தௌpப்பான் கொண்டு வேகமாக தண்ணீரை அடிப்பதன் மூலம் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும் பு+ஞ்சாணங்களை அழிக்கலாம்.

 மேலும் கிரைசோபொலா இரை விழுங்கிகள், ரூகோஸ் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்ளும். இதனால் தாக்கப்பட்ட தோப்புகளில் 400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபொலாவை விட வேண்டும்.

 இது திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய ஒருங்கிணைந்த புச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

 இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 




தற்போதைய செய்திகள்