திருப்புர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை.
இந்த ஆலை அரவைக்குத் தேவையான கரும்பு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆகிய தாலுகாக்களில் உள்ள ஆலை அங்கத்தினர்களான கரும்பு விவசாயிகளிடமிருந்து ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியு+ர், நெய்க்காரப்பட்டி, பழனி ஆகிய கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு ஏக்கர் கன்னி கரும்பில் இருந்து சராசரியாக 40 டன் கரும்பும், கட்டைக்கரும்பில் இருந்து சராசரியாக 35 டன் கரும்பும் மகசு+லாக கிடைக்கும்.
இந்த நிலையில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கரும்பு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விலையில் விநியோகிப்பதற்காக, அதிக மகசு+ல் மற்றும் அதிக சர்க்கரை சத்து கிடைக்கக்கூடிய கோ.11015, கோ.06020, கோ.09004 ஆகிய புதிய ரக விதைக்கரும்புகள் மொத்தம் 25 டன்கள், கோவை கரும்பு இனப்பெருக்க கழகத்திடமிருந்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்றுள்ளது.
இவை விதைக்கரணைக்காக நடவு செய்வதற்கு கோட்ட கரும்பு அலுவலகங்கள் மூலம் முன்னோடி கரும்பு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்த கரும்பை விதைக்கரணைக்காக ஒரு பரு மற்றும் இரு பரு கரணைகளாக வெட்டி நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அத்துடன் 25 டன் மரபணு விதைக்கரும்பும் வாங்கி மானியத்துடன் கூடிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
இந்த விதைக்கரணை கரும்புகள் வளர்ந்ததும், அவை விதைக்கரணையாக வெட்டப்பட்டு 2020-2021ம் ஆண்டு நடவுப்பருவத்தில் நடவு செய்யப்படும். புதிய ரகங்கள் மற்றும் மரபணு விதை நடவிற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 மானியமாக வழங்கப்படுகிறது என சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் தக்காளி, மிளகாய், கத்தரிக்காய் நாற்றுகள் 100 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதுதவிர சிறு, குறு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக மின்மோட்டார், பைப்லைன், மேல்நிலை தொட்டி கட்ட 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி வேளாண்துறை சார்பில் உயிர் உரமான அசோஸ்பைரில்லம் 50 சதவீத மானியத்தில் அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்படும். எனவே இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆண்டிப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
