width:468px height:296px மேலாண்மை செய்திகள்

இஞ்சி சாகுபடி..!!!




இந்தியாவில் மேற்கு கடலோர பகுதிகளில் இஞ்சி மே மாதங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதங்களிலும், இறவைப்பயிராக சாகுபடி செய்யும்போது பிப்ரவரி மாத இடையில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பயிரிடப்பட்டு வருகிறது.

நிலத்தை தயார் செய்தல் :

இஞ்சி பயிரை சாகுபடி செய்ய பிப்ரவரி - மார்ச் மாதம் கோடைக்கால மழை கிடைத்தவுடன், நிலத்தை 4 - 5 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும். நிலத்தை நன்றாக கொத்தி பதமாக்க வேண்டும்.

அதற்கு பிறகு தொழு உரம் மற்றும் மண்புழு உரம் போன்றவற்றை நிலத்தில் போட்டு நிலத்தை நன்கு தயார் செய்ய வேண்டும்.

அதன்பின் 15 செ.மீ. உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் வைத்து பாத்திகளுக்கிடையே 40 முதல் 50 செ.மீ. இடைவெளியில் பார் அல்லது மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்.

விதையளவு :

இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இனப்பெருக்கம் செய்து அதன் பிறகு நடவு செய்யலாம். ஒரு எக்டருக்கு 1500 - 1800 கிலோ விதை இஞ்சி கரணைகள் தேவைப்படும்.

நடவு :

கோடைமழை கிடைத்தவுடனே இஞ்சி நடவு செய்ய வேண்டும். 20 - 25 கிராம் எடை மற்றும் 2.5 - 5 செ.மீ. நீளம் உள்ள கரணைத் துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

பாத்திகளில் 50 செ.மீ. ஓ 50 செ.மீ (அ) 25 செ.மீ. ஓ 25 செ.மீ. இடைவெளி அமைத்து சிறு குழிகளில் நடுதல் வேண்டும்.

கரணைகளை நடவு செய்யும் போது அந்த கரணைகளை ஜீவாமிர்த கரைசலில் நனைத்து நடவு செய்ய வேண்டும். ஜீவாமிர்த கரைசல் வேர் அழுகல் நோயைத் தடுக்கும்.

உரமிடுதல் :

ஒரு எக்டருக்கு தொழு உரம் 25 முதல் 30 டன் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 75, 50 மற்றும் 25 கிலோ இடவேண்டும்.

முழு மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தை அடியுரமாக இடலாம். தழைச்சத்தை கரணைகளை விதைத்த 45-வது நாளிலும், மறு பாதியை சாம்பல்சத்தும் சேர்த்து 90-வது நாளிலும் மேலுரமாக இடவேண்டும்.

புச்சிக்கட்டுப்பாடு :

புச்சித் தாக்கத்தை அகற்ற இஞ்சி, புண்டு, பச்சை மிளகாய் கரைசலையும், செடிகளின் இலைகள் பழுப்பு நிறமாவதைத் தடுக்க கற்புர கரைசலையும், செடிகளின் வளர்ச்சிக்கு பஞ்சகாவ்ய கரைசலையும் தௌpத்து விடலாம்.

அறுவடை மற்றும் மகசுல் :

 இஞ்சி காய்கறிக்காக பயன்படுவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம்.

 சுக்கு (உலர்ந்த இஞ்சி) தயாரிக்க 245 முதல் 260 நாட்களில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது) அறுவடை செய்யலாம்.

 ஒரு எக்டருக்கு 20 - 25 டன்கள் பச்சை இஞ்சி மகசு+லாகக் கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்