width:459px height:480px மேலாண்மை செய்திகள்

தினமும் ஒரு வெள்ளரிக்காய், அதன் பயன்களும்




வெள்ளரிக்காயின் தாயகம் இந்தியா தான். வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும்.

வெள்ளரிக்காயில் 95 நீர்ச்சத்து உள்ளது.

அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை குறைக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்கள், தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.

நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரிக்காயில் மிகுதியாக உள்ளது.

வெள்ளரிக்காயை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.

100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரிகள் 18 தான் உள்ளன.
 கோடைக்காலங்களுக்கு ஏற்ற பழங்களில் இதுவும் ஒன்று.
 வெள்ளரிக்காய் மட்டும் அல்ல அது பழுத்து பழம் ஆனாலும் அதன் குணங்கள் மாறமல் பயன் அளிக்கும்.

வெள்ளரிக்காய் நம் உடலுக்கு அளிக்கும் சத்துக்களும் மருத்துவ குணங்களும்....

வெயில் காலத்திற்கு வெள்ளரிக்காய் பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. மேலும் தாகத்தை தணிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

வெள்ளரிக்காய் சிறுநீர் கற்கள் வராமல் தடுக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

வெள்ளரிக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் வாயில் உண்டாகும் கிருமிகளை அழித்து, ஈறுகளை பலப்படுத்தி, மேலும் வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். கொழுப்பு செல்களைக் கரைக்கும். அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும். மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யாது.

 வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிக்கானும், கந்தகமும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.

 தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் நமது தோலில் உள்ள வறட்சி நீங்கும். தோல் பொலிவு பெரும்.

 வெள்ளரிக்காய் வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

 வெள்ளரிக்காயில் கலோரி குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை உண்ணலாம். தரமான மண்புழு உரம் தயாரிப்பு..!




தற்போதைய செய்திகள்