width:1772px height:1260px மேலாண்மை செய்திகள்

விவசாயிகள் தென்னை மரத்திற்கு காப்பீடு செய்யலாம்..!




தென்னை காப்பீட்டு திட்டம் இந்திய வேளாண் காப்பீட்டு கழகத்தினால் செயல்படுத்தப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சியை சேர்ந்த, குறைந்தது 5 வளமான மரங்களை கொண்ட தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் காப்பீடு செய்யலாம்.

தனி மரமாகவோ அல்லது ஊடுபயிராகவோ, வரப்பு மற்றும் வீட்டுத்தோட்டத்தில் சாகுபடி செய்யப்படும் புச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்படாத அனைத்து ரக தென்னை மரங்களுக்கு (4 முதல் 60 வயதுடைய ஒட்டு ரகங்கள் மற்றும் 7 முதல் 60 வயதுடைய நெட்டை ரகங்கள்) காப்பீடு செய்யலாம்.

இதற்கு செலுத்த வேண்டிய காப்பீட்டு கட்டணம் ஆண்டுக்கு 4 முதல் 15 வயதுடைய மரம் ஒன்றுக்கு 2 ரூபாய் 25 பைசாவும், 16 முதல் 60 வயதுடைய மரம் ஒன்றுக்கு 3 ரூபாய் 50 பைசாவும் ஆகும்.

இதுதவிர தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் காப்பீட்டு கட்டண மானியம் வழங்குகிறது. 4 முதல் 15 வயதுடைய மரம் ஒன்றுக்கு 900 ரூபாயும், 16 முதல் 60 வயதுடைய மரத்திற்கு 1,250 ரூபாயும் காப்பீட்டு தொகையாக கிடைக்கும்.

புயல், மழை, சுறாவளி, வெள்ளம், புச்சிநோய் தாக்குதல், இயற்கை தீ மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்பு, வறட்சியால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு செய்யலாம்.

இதற்கு முன்மொழிவு மற்றும் பதிவு விண்ணப்பம், அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், ஆதார் அட்டை நகல், தென்னந்தோப்பின் வரைபடம், வங்கி வரைவோலையாக காப்பீட்டு கட்டணம், தென்னை மரங்களின் புகைப்படம், வட்டார வேளாண்மை உதவி இயக்குனரின் கள ஆய்வு சான்று ஆகிய ஆவணங்களுடன் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலுர் மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பிரதி வாரம் புதன்கிழமை தோறும் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இந்த மறைமுக ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு மக்காச்சோளம், பருத்தி ஆகிய விளைப்பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதோடு சரியான எடை மற்றும் கமி‌‌ஷன், தரகு இல்லாமல் விற்பனை செய்து பயன்பெறலாம்.

இந்த மறைமுக ஏலத்தில் இந்திய பருத்தி கழகம், உள்ளர் மற்றும் வெளியுர் வியாபாரிகள் கலந்து கொள்ள இருப்பதால், தங்களின் விளைப்பொருட்களின் தரத்திற்கான விலையினை பெறலாம்.

வேளாண் விளைப்பொருட்களை உலர்த்திக்கொள்ள உலர்களம் வசதியும், வேளாண் விளைப்பொருட்களை இருப்பு வைத்து கொள்வதற்கு நவீன சேமிப்பு கிட்டங்கி வசதியும், ரூ.3 லட்சம் வரையில் பொருளீட்டுக்கடன் பெறும் வசதியும் உள்ளது என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.




Site For Sale Contact : 9894832938