எந்த ஒரு நோய்களையும், பிரச்சனைகளையும் வரும் முன் காப்பதே சிறந்த வழியாகும். அதனால் கோடைக்காலங்களில் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படாமல் இருக்க, நாம் செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்.
உணவு, தண்ணீர், ஈரப்பதம் உள்ள சு+ழலை பண்ணை மற்றும் கொட்டகை அமைப்புகளில் ஏற்படுத்துவது, போன்ற சில முன் எச்சரிக்கை வழிகளை செய்யும் போது கோழிகளை நோய்களில் இருந்து காக்க இயலும்.
கொட்டகை பராமரிப்பு :
பகல் நேரங்களில் முட்டை இடும் கோழிகள், அடை கோழிகள் மற்றும் இளம்குஞ்சுகள் இருக்கும் பட்சத்தில் கொட்டகை சுற்றி மரங்கள் அதிக அளவில் இல்லாதவர்கள், சணல் சாக்கினை தண்ணீரில் நனைத்து நான்கு பக்கங்களிலும் சற்று இடைவெளி விட்டு தொங்க விடலாம். அதில் பட்டு கொட்டகைக்குள் காற்று புகுமாறு அமைக்கலாம்.
அப்படி செய்வதன் மூலம் கொட்டகையில் ஈரப்பதம் அல்லது குறைந்த பட்சம் குளிர் காற்றை ஏற்படுத்த முடியும்.
கொட்டகையினுடைய உள் பகுதியின் நான்கு மூலைகளிலும் மண்பானையில் தண்ணீர் நிரப்பி வைக்கலாம். பானையை மணல் மீது வைப்பது அவசியம். பானை சாய்ந்து விடாமல் இருக்க வேண்டும்.
பண்ணை அமைப்பு :
பண்ணை ஈரப்பதமாக இருத்தல் அவசியம்.
தண்ணீர் பற்றாகுறை உள்ளது என எண்ணினால் மண்பானைகளில் ஒரு சிறிய துளையிட்டு சணல் அல்லது தேங்காய் நார் கயிறு ஒன்றை பானை ஓட்டையில் விட்டு இரண்டு பக்கமும் முடிச்சி இட்டு வெளிபுறம் மட்டும் கொஞ்சம் நீலமாக வைத்தால் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கசியும். இதனால் அந்த இடம் ஈரப்பதம் உள்ளதாக இருக்கும்.
தண்ணீர் :
தினசரி ஏதாவது ஒரு குளிர்ச்சி தரும் மூலிகைகளை தண்ணீருடன் சேர்த்துக் தருவது அவசியம்.
சோற்றுக்கற்றாழை, துளசி, சீரகம், வெந்தயம், எலுமிச்சை போன்ற குளிர்ச்சி தரும் ஏதேனும் ஒன்றை தவறாமல் தண்ணீரில் கலந்து கொடுப்பது அவசியம்.
தீவனம் அளிப்பு :
முக்கியமாக கீரைகள் அவசியம் கொடுக்க வேண்டும், சாதம் நேரடியாக கொடுக்காமல் காய்கள், கீரைகள் ஆகியவற்றை சமைத்து கொடுப்பது, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மோர் சாதம் கொடுப்பது, மோரில் சின்ன வெங்காயம் ஊறவைத்து கொடுப்பது, தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொடுப்பது, மண்பானையில் இரவே சாதம் இட்டு மோர் சின்ன வெங்காயம் வெட்டி போட்டு மறுநாள் உணவாக கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
குளிர்ந்த உணவுகளை 11 மணி அளவில் கொடுப்பது மிகவும் நல்லது. கோழிகளுக்கு சளி பிடிக்கமல் இருக்க இது உதவும்.
அதிகமான குளிர்ச்சியும் கோழிகளுக்கு சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது அதனையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
தரமான மண்புழு உரம் தயாரிப்பு..!
இயற்கை விவசாயத்தில் மிகவும் அவசியமாக பயன்படுவது மண்புழு உரம்...
