width:620px height:350px மேலாண்மை செய்திகள்

காபியில் வெள்ளை தண்டுத் துளைப்பான் நோய் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட ஆலோசனை




காபியில் வெள்ளை தண்டுத்துளைப்பான் நோயை கட்டுப்படுத்தலாம் என தாண்டிக்குடி மண்டல காபி ஆராய்ச்சி நிலைய துணை இயக்குனர் பாபு ஆலோசனை வழங்கி உள்ளார்.

காபியில் வெள்ளை தண்டுத்துளைப்பானின் பறக்கும் காலம் வரும் ஏப்ரலில் வரவிருக்கிறது. வறட்சி மற்றும் அதிக வெப்பத்தால் இதன் பாதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

இது குறித்து துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மார்ச், ஏப்ரலில் நிழல் களைப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். மே, ஜூனில் போதுமான மழை பெய்யும் போது, அதிகமாக நிழல் உள்ள இடங்களில் மட்டும் களைப்பு செய்யலாம். வெள்ளை தண்டுத்துளைப்பான் பாதிக்கப்பட்ட செடிகள் உள்ளதா என்பதை கண்டறிதல் அவசியம்.

அதிகம் பாதிக்கப்பட்ட செடிகளை வேரோடு தோண்டி எடுத்து அழிக்க வேண்டும். குறைவான பாதிப்புள்ள செடிகளின் மையத்தண்டு, தடித்த தாய் வாதுகளை சணல் சாக்கு பை துண்டுகளால் சுற்றிவிட்டு, குளோரிபைரியாஸ், சைபர்மெத்தரின் மருந்து, 200 மி.லி., சோப் ஆயிலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.இதன் மூலம் தண்டுத்துளைப்பான் பரவலை தடுக்கலாம்.

நல்ல ஆரோக்கியமான செடிகளில் 20 கிலோ தெளிப்பு சுண்ணாம்பை 200 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் டிடிஎல் பெவிக்கால் கலந்து பூசுவதால் தண்டுத்துளைப்பான் முட்டையிடுவதை தடுக்கலாம். இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு தலா 10 வீதம் ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்குள் தோட்டத்தில் வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என, அவர் கூறினார்.




Site For Sale Contact : 9894832938