பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதலை மருந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என மதுரை பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியை விமலா தெரிவித்தார்.
தத்துப்பூச்சிகள் பருத்தி இலையில் உள்ள சாற்றினை உறிஞ்சுவதால் இலைகள் சுருக்கங்கள் ஏற்பட்டு கருக துவங்கும். பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி மகசூல் பாதிக்கப்படும்.
இதனை கட்டுப்படுத்த பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியை கூறியதாவது: பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 40 மில்லி இமிடாகுளோபிரிட் அல்லது 20 கிராம் அசிட்டாமி பிரிட் அல்லது 240 கிராம் டைபென்தையூரான் தெளிக்கலாம். கைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். விசைத் தெளிப்பான் என்றால் இளம் பயிருக்கு ஏக்கருக்கு 60 லிட்டர் தேவைப்படும். சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்க்க வேண்டும். இது மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய உதவும், என்றார்.
