கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் வாகன போக்குவரத்து தடையால் சந்தைகளுக்கு, காய்கறி வரத்து தடைபட்டுள்ளது. இந்நிலையில் கோவை மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை அதிக விலைக்கு விற்பனையாகின.
சின்ன வெங்காயம் கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ.40 விற்பனையான நிலையில் திங்கள்கிழமை ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.60க்கு விற்பனையானது. பெரிய வெங்காயம் கிலோ ரூ. 35 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்டது. இது, கிலோவுக்கு ரூ.4 வரை அதிகமாகும்
. இதேபோல பச்சை மிளகாய் கடந்த வாரத்தில் கிலோ ரூ.20 விற்பனையானது திங்கள்கிழமை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. அனைத்து இங்கிலீஷ் காய்கறிகளின் வரத்தும், முற்றிலும் நின்று விட்டது. வரும் நாட்களில், வரத்தை பொறுத்து விலையில் மாற்றும் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
