width:600px height:413px மேலாண்மை செய்திகள்

கால்நடைகளுக்கு உணவாகும் கோழிக்கொண்டை பூ




விக்கிரமங்கலத்தில் கால்நடைகளுக்கு கோழிக்கொண்டை பூக்கள் உணவாகின்றன.

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் மதுரை பூ மார்க்கெட்டிற்கு அனுப்புகின்றனர்.
கரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு ஆகிய காரணங்களால் வெளியூர்களுக்கு பூக்களை அனுப்ப முடியாமல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விக்கிரமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.கிருஷ்ணாபுரம் விவசாயிகள் கூறியதாவது: ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் செவ்வந்தி பூக்களை பறிக்கவில்லை. ஆனால், கோழிக்கொண்டை செடிகளை பசுக்களுக்கு இரையாக்கி உள்ளோம், என்றார்.

 




தற்போதைய செய்திகள்