தேனி மாவட்டம், கம்பம் மற்றும் கூடலூர் பகுதியிலிருந்து, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளுக்கு, இரு சக்கர வாகனம், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில், பால் சப்ளை செய்யப்படுகிறது. கரோனா தடுப்பு மற்றும் ஊரடங்காலும், வியாழக்கிழமை வரை, பால் கொண்டு செல்வதில் பிரச்னை இல்லை.
ஆனால் வெள்ளிக்கிழமை முதல், கேரள காவல்துறை, தமிழகத்தில் இருந்து வரும் பாலுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பால் கொண்டு வருபவர்களுக்கு எவ்வித தொற்றும் இல்லை என, மருத்துவத் துறை சான்றுடன் வரவேண்டும். மேலும், பால் தரம் குறித்து, தரக் கட்டுப்பாடு அதிகாரியின் சான்றுடன் வந்தால் மட்டுமே கேரளாவிற்குள் அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர். இதனால், கேரளாவுக்கு பால் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
