width:px height:px செய்திகள்

தேனி மாவட்டத்தில் மாங்காய் மகசூல் பாதிப்பு




தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் 20,000 ஏக்கரில் மா விவசாயம் நடைபெறுகிறது. அதிலும் போடி பகுதியில் உள்ள ஊத்தாம்பாறை, சிறைக்காடு, புதுக்குளம், சோலையூர், வடக்குமலை, முந்தல், குரங்கணி, கொட்டகுடி, முட்டம், முத்துக்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 8,000க்கும் அதிகமான ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் காளைப்பாடி, நீலா, காசா, செந்தூரம், கல்லா, காதர், பங்கனபள்ளி மாங்காய் என பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் மற்றும் வெளிநாடுகளுக்கும் மாங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தாண்டு மாங்காய் ரகத்தை பொறுத்து டன் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் இந்தாண்டு போதிய மழை மற்றும் கால சூழ்நிலையால் மாங்காய்கள் நன்கு விளைந்துள்ளன. இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மாங்காய் மகசூல் எடுக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தோட்டங்களில் விளைந்த பல ஆயிரம் டன் மாங்காய்கள் மரங்களிலேயே காய்த்து வீணாகி வருகின்றன. சில பகுதிகளில் மூட்டைகள் கட்டி ஏற்றுமதிக்கு தயாராக வைத்துள்ள நிலையில் வெளியூருக்கு அனுப்ப முடியாமல் மாங்காய்கள் வீணாகி வருகின்றன.

இதுகுறித்து போடியில் உள்ள தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது, அத்தியாவசிய உணவாக பயன்படும் காய்கனிகளுக்கு மட்டுமே தற்போது முக்கியத்துவம் தரப்படுகிறது. மா விவசாயிகள் நிலை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து உரிய




தற்போதைய செய்திகள்