width:600px height:413px செய்திகள்

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு




ஈரோட்டுக்கு காய்கறிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தாராபுரம், கோவை, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வருகின்றன. ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி ஈரோட்டுக்கு அதிகமாக வருகிறது. எனவே, வரத்து அதிகமாக இருப்பதால் தக்காளி விலை சரிவு அடைந்துள்ளது.

இதுகுறித்து, தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது: தக்காளி விளைச்சல் தற்போது அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் அதிகமாக தக்காளி அறுவடை செய்யப்படும். இதனால் தக்காளியின் விலையும் குறைந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மேலும் விலை குறைந்து பெட்டி தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.




தற்போதைய செய்திகள்