கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் விவசாயிகள் அதிகளவில் கத்திரிக்காய் பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாள்களுக்கு முன் கிலோ ரூ.20க்கு விற்பனையானது. இந்நிலையில், ஊரடங்கால் காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்து, விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
அந்த வகையில் ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் வெள்ளிக்கிழமை கத்திரிக்காய் கிலோ ரூ.8க்கு விற்பனை ஆனது. இந்த விலை கட்டுப்பாடியாகது என்றும், இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
