width:250px height:202px விவசாயம்

பப்பாளி, கொய்யா விற்பனை அதிகரிப்பு




கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதியில் உள்ள சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் முடப்பட்டுள்ளதால், நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் உணவுக் கட்டுப்பாட்டில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் கத்தரி, கீரை, பாகற்காய் போன்ற காய்கறிகளையும், பழவகைகளில் கொய்யாப்பழம், பப்பாளி ஆகியவற்றையும் அதிகம் வாங்கி சாப்பிடுகின்றனர். அதனால் அவற்றின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு பழங்களைக் காட்டிலும் ஊரடங்கில் உள்ளூரில் உற்பத்தியாகும் பழங்களே அதிகம் விரும்பி வாங்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆலங்குளம், ராதாபுரம், வள்ளியூர், திண்டுக்கல், திருப்பூர் பகுதிகளில் இருந்து பப்பாளி பழங்களும், ஆலங்குளத்தில் இருந்து கொய்யாப்பழங்களும் அதிகம் வந்துள்ளன. பப்பாளி கிலோ ரூ.60 வரையும், கொய்யா ரூ.100 வரையும் பழத்தின் தரத்திற்கு ஏற்ப விற்பனையாகி வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.




Site For Sale Contact : 9894832938