width:600px height:450px விவசாயம்

முருங்கை பறிப்பை தவிர்க்கும் விவசாயிகள்




விலை இல்லாததால் முருங்கை காய் பறிப்பை ஆண்டிபட்டி விவசாயிகள் தவிர்த்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியி்ல் விலையில்லாத காரணத்தால் முருங்கை காய் பறிப்பதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இப்பகுதி கிராமங்களான சிலுக்குவார்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முருங்கை சாகுபடி நடைபெறுகிறது. இங்கிருந்து முதல் தர முருங்கை காய்கள் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது சீசன் என்பதால் ஒவ்வொரு மரத்திலும் நுாற்றுக்கணக்கான காய்கள் காய்த்து தொங்குகின்றன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் காய்களை மார்க்கெட் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், வியாபாரிகள், விவசாயிகளிடம் கிலோ ரூ.5க்கும் குறைவாக விலை கேட்பதால் காய் பறிப்பை தவிர்த்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: குறைவான விளைச்சல் காலத்தில் முருங்கைக்கு கிலோ ரூ.120 வரை விலை கிடைத்தது. தற்போது அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லை. காய் பறிப்புக்கு ஆட்களும் கிடைக்கவில்லை. பறித்து விற்பனைக்கு அனுப்பினாலும் நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.

 




Site For Sale Contact : 9894832938