நோய்த் தாக்குதல் காரணமாக, பாகற்காய் மகசூல் பாதியாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதிகளில், பந்தல் அமைத்தும், நேரடியாகவும் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. அவை விதைத்த, 60–65 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். பிறகு வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். விதைகள் முதிர்ச்சியடைய ஆரம்பிக்கும் முன்பே காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
ஏக்கருக்கு, 140 – 150 நாட்களில், 14 டன் காய்கள் வரை கிடைக்கும். இந்நிலையில, தற்போது, வெயில் அதிகரித்ததும், செடிகளில், ஒரு வித நோய்த்தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இலைகளை துளையிட்டு, பச்சையத்தை உறிஞ்சும், புழுக்களால் செடியின் வளர்ச்சி பாதிக்கிறது. பூக்களும் உதிர்வதால், மகசூலும் வெகுவாக குறைந்து விடும் என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
