விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பு உள்ளதாகவும், இதனால், கூடுதல் உரங்களை வாங்கி குவிக்க வேண்டாம் என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும், வேளாண் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காரணமாக, வரும் காலத்தில், தட்டுப்பாடு ஏற்பட்டு, கிடைக்காமல் போகும் என்ற அச்சத்தால், உரங்களை விவசாயிகள் வாங்கிக் குவிக்கின்றனர். தற்போது, போதுமான அளவு உரங்கள் இருப்பில் உள்ளன. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
