width:600px height:450px பழங்கள்

முள்சீத்தாப்பழம் சாகுபடி




பிலிப்பைன்ஸ், மலேசியா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயிர் செய்யப்படுகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளில் இயற்கையாகக் காணப்படுகின்றது.

 

மண்

நல்ல வளமான, ஆழமும், வடிகால் வசதியும் கொண்ட செம்மண், கரிசல் மண் வகைகள் ஏற்றது. இது மானாவாரியாக வளரும் தன்மை கொண்டது.

பருவம்

நல்ல சூரிய வெளிச்சம், நடுத்தர ஈரப்பதம், வெதுவெதுப்பான வெப்பநிலை உலர்ந்த காலநிலை உள்ள வெப்பமண்டலப் பகுதிகளில் முள்சீத்தா நன்றாக வளரும். கார்த்திகை மாதத்தில் நடவு செய்ய வேண்டும்.

இரகங்கள்

பழங்களின் சுவையைப் பொறுத்து இதய வடிவம், உருண்டை வடிவம், ஒழுகற்ற வடிவம் என்ற மூன்று வகைகளில் காணப்படுகின்றது. பென்னட் என்ற முள்சீத்தாப் பழம் தான் சிறந்த ரகமாகப் போற்றப்படுகிறது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் 2 X 2 X 2 அளவுள்ள குழிகளை 5 மீட்டர் இடைவெளியில் எடுத்து கொள்ள வேண்டும். குழிகளில் தொழு உரம் இட்டு குழிகளை ஆறப் போட வேண்டும்.

விதையளவு

விதை மூலமாகவும், மொட்டுக் கட்டிய ஒட்டுச் செடிகளைக் கொண்டும் பயிர் செய்யலாம். ஏக்கருக்கு 160 செடிகள் வரை நடலாம்.

விதைத்தல்

தயார் செய்துள்ள குழிகளில் தெளிவான கன்றுகளை குழியின் மையப்பகுதியில் 5 மீட்டர் இடைவெளியில் ஊன்ற வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சினால் போதுமானது.

உரங்கள்

வருடம் ஒரு முறை செடி ஒன்றிற்கு கலப்பு எரு 10 கிலோ இட்டால் போதுமானது. இதையே இரண்டாக பிரித்தும் அளிக்கலாம்.

பாதுகாப்பு முறைகள்

களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். வருடம் ஒருமுறை கவாத்து செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

இதில் பூச்சி தாக்குதல் எதுவும் இருக்காது. இதற்கென தனியாக பாதுகாப்பு முறைகள் தேவையில்லை. வேர் அழுகல் நோய் காணப்பட்டால் மட்டும் குருணை மருந்தை வேர் பகுதியில் வைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை

தீவு பகுதிகளில் வருடத்திற்கு மூன்று பருவங்கள் இம்மரம் பூப்பதால், மூன்று முறை அறுவடை செய்ய வேண்டும். மற்றப் பகுதிகளில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் முள் சீத்தாமரம் பூக்கின்றது. ஜுன்-ஜுலை மாதங்களில் பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

மகசூல்

முள் சீதாப் பழங்கள் உருவத்தில் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு பழமும் சுமார் மூன்று கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடை இருக்கும். ஒரு பெரிய பழத்தின் நீளம் சுமார் ஒரு அடியும், அகலம் அரை அடியும் இருக்கும். வடிவத்திற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.




தற்போதைய செய்திகள்