width:1280px height:720px பழங்கள்

அத்திப்பழம் சாகுபடி




உலகில் தற்போது கிரீஸ், அல்ஜீரியா, மெராக்கோ, சிரியா, இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

அத்திப்பழம் எப்படி பயிரிடுவது 

அத்தியில் நாட்டு அத்தி, டிம்லா அத்தி, ஆப்கான் அத்தி, இஸ்ரேல் அத்தி போன்ற வகைகள் உள்ளன.

தை மாதம் நடவிற்கு ஏற்ற பருவம் ஆகும்.

அத்திமரமானது களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும் தன்மை கொண்டது.

சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழுஉரம் கலந்து உழவு செய்ய வேண்டும்.

விண் பதியன்கள் மற்றும் ஒட்டுக்கட்டுதல் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யப்படுகிறது.

தேர்வு செய்த பதியன்களை 5.7 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மழை காலங்களில் நடவு செய்தால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

இது வறட்சியைத் தாங்கி வளர்வதால் இவற்றை மானாவாரியாக பயிர் செய்யலாம். இறவையாக பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.

நன்கு வளர்ந்த மரம் ஒன்றுக்கு 20 கிலோ காய்ந்த தொழு எருவும், 600 கிராம் தழைச்சத்து, 350 கிராம் சாம்பல் சத்து, 400 கிராம் மணிச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இந்த உர அளவை பிரித்து இரண்டு தடவையாக கொடுக்க வேண்டும்.

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பழ பறிப்பு முடிந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும்.

இதில் நோய் தாக்குதல் குறைவு. அசுவினி பூச்சி தாக்குதல் மட்டும் காணப்படும்.

அசுவினி பூச்சியை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது மீதைல் டெமட்டான் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

நடவு செய்த 4வது ஆண்டு முதல் மகசூல் தரவுள்ளது. ஆனால் 8 ஆண்டிற்கு பிறகு நிரந்தர வருமானம் கிடைக்கும்.

ஒரு மரத்தில் இருந்து 200 முதல் 360 கிலோ பழங்கள் கிடைக்கும்.




தற்போதைய செய்திகள்