width:1600px height:1089px மலைத்தோட்டப் பயிர்கள்

தேயிலை தோட்டம் அமைக்கும் முறைகள்
தேயிலை ஒரு பசுமைத் தாவரம் ஆகும். தேயிலை முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் பயன்படுத்தினர்.

பின் சீனாவிற்கு வந்த ஜப்பானிய புத்தமத துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்து இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840 – 50 களில் இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென்கிழக்காசிய மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

இந்தியாவில் தேயிலை தொழில் சுமார் 180 ஆண்டுகள் பழமையானது ஆகும். உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்திய திகழ்கிறது. இந்தியாவின் வாணிகப் பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1830 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் தேயிலையின் வணிக உற்பத்தி ஆரம்பமானது. அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது.

 

தேயிலையை சீனா, இலங்கை, கென்யா, துருக்கி, இந்தோனேசிய, வியட்னாம், வங்காளதேசம், மல்லாவி, உகாண்டா, தான்சானியா,மலேசிய போன்ற பல நாடுகளும் தேயிலையைப் பெரும்பாலும் உற்பத்தி செய்கின்றன.

நாற்றங்கால் தயாரிக்கும் முறை:

மே – ஜூன், செப்டம்பர் – அக்டோபர் மாதங்கள் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

தேயிலை சாகுபடிக்கு சிறந்த அங்கக சத்துக்கள் நிறைந்த வடிகால் வசதியுடைய மண் நிலங்கள் சாகுபடிக்கு சிறந்ததாகும். மணல் தவிர்த்து அணைத்து வகையான மண்ணிலும் பயிர் செய்யலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 – 5.4 ஆக இருக்க வேண்டும்.

வடிகால் வசதியுடைய பொறை மண் வகைகள் நாற்று உற்பத்திக்கு சிறந்ததாகும். மண்ணின் கார அமில தன்மை 4.5 – 4 .8 வரை இருக்க வேண்டும். நாற்று உற்பத்திக்கு தேவையான மண்,மணல் போன்ற பொருட்களை கார அமிலத்தன்மை சோதனை செய்தபின் பயன்படுத்த வேண்டும்.

200 அடர்த்தி, 10 செ.மீ அகலம், 30 – 45 செ.மீ நீளமுள்ள பாலிதீன் பைகளை தேர்வு செய்ய வேண்டும். பின் வடிகால் வசதிக்கு கீழ்பக்கத்தில் துளைகள் இட வேண்டும். முக்கால் பாகத்திற்கு மணல் மற்றும் மண் க்கலவையினை 1 : 3 விகிதத்தில் நிரப்ப வேண்டும். பின்பு மீதமுள்ள பகுதியில் 1 : 1 மணல் மற்றும் மணல் கலவையினை நிரப்ப வேண்டும். நிழல் பகுதியில் பைகளை வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும்.

நோயற்ற, வீரிய வளர்ச்சியுடைய, நல்ல மகசூல் தரக்கூடிய தாய் செடிகளை தேர்வு செய்ய வேண்டும். நாற்று உற்பத்திக்கு மூன்று வாரத்திற்கு முன் 0 . 5 சதவிகிதம் அலுமினியம் சல்பேட், 1 சதவிகிதம் மெக்னிசியம் சல்பேட் கலவையும், இரண்டு வாரத்திற்கு முன்பாக துத்தநாக சல்பேட் கலவையும், கடைசி ஒரு வாரத்திற்கு முன்பாக 1 சதவிகிதம் உரிய தெளித்து நேர்த்தி செய்ய வேண்டும்.

தண்டு குச்சிகளை ஏப்ரல் – மே, ஆகஸ்ட் – செப்டம்பர் பாதங்களில் எடுக்க விடும். ஒரு இலை மற்றும் கணுக்குகளுடைய குச்சிகளை வெட்டி கீழ்ப்பகுதியில் சாய்வான வெட்டு கொடுக்க வேண்டும். பின்பு மண்கலவை நிரப்பிய பாலிதீன் பைகளுக்கு நீர் ஊற்றி நடவு செய்ய வேண்டும். குச்சிகள் 10 – 12 வாரங்களில் வேர்பிடிக்கத் தொடங்கும். பாலிதீன் பைகளை நிழல் வலை அமைத்து வைக்க வேண்டும். நடவு செய்து 90 நாட்களில் நிழல் வலைகளை நீக்கி விடலாம்.

வளர்ச்சியின் தன்மைக்கேற்ப நாற்றுகளை பிரித்து தாங்கு குச்சிகள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் 30 கிராம் நாற்றங்காலுக்குரிய கலவையினை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து 4 சதுரமீட்டர் பரப்பளவுள்ள நாற்றுகளை இட வேண்டும்.

பயிரிடும் முறை:

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். இதில் இரண்டு முறைகளில் நடவு செய்யலாம்.

நடவின் பொழுது பாலிதீன் பைகளை நீள் வட்டத்தில் கிழித்து வேர்பாகம் உடையாமல் நடவு செய்ய வேண்டும். ஒற்றை வரிசை முறை / அடுக்கு முறையில் 1 .20 x 0 .75 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு எக்டருக்கு 10800 செடிகளை நடலாம்.

நிலங்களில் ஈரப்பதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். கோடைகாலங்களில் இளவயது செடிகள் காயத்தை வண்ணம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த இரண்டாம் மாதம் முதல் உரமிட வேண்டும். ஒரு எக்டருக்கு ஆண்டிற்கு ஒருமுறை மணிச்சத்து தரும் பாறைஉப்பு 100 கிலோ இட வேண்டும். அதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இட வேண்டும். இரண்டாம் வருடம் தழைச்சத்து 250 கிலோ மற்றும் மணிச்சத்து 350 கிலோ உரங்களை பிரித்து வருடத்திற்கு 4 முறை இட வேண்டும்.

நடவு செய்த 3 – 5 மாதங்களில் நுனி தண்டினை 8 – 10 இலைப்பகுதி விட்டு வெட்டிவிட வேண்டும். இவ்வாறு செய்வதினால் பக்க கிளைகளின் வளர்ச்சியினை அதிகரிக்க முடியும். தேயிலை தோட்டத்தில் நிழலுக்கு மரங்களை வைத்து பராமரிக்க வேண்டும்.

நடவு செய்த மூன்றாம் ஆண்டில் அறுவடை செய்யலாம். அறுவடையின் பொது வளரும் மொட்டுடன் இரண்டு இலையை சேர்த்து அறுவடை செய்ய வேண்டும்.

ஒரு எக்டாரில் இருந்து 10 டன் தேயிலை கிடைக்கும்.
தற்போதைய செய்திகள்