width:640px height:384px செய்திகள்

`5,000 சதுர அடி; தினமும் 30 கிலோ கத்திரிக்காய்கள்!\' -




கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாத காலமாக விடுமுறையில் வீட்டில் முடங்கியவர், ஏதேனும் வருமானம் வரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் என எண்ணினார்.

கணினி நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர், ஊரடங்கால் வருமானத்தை ஈடுசெய்ய, இயற்கை முறையிலான கத்திரி சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பூவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் மயிலாடுதுறையில் உள்ள கம்ப்யூட்டர் ஹார்டுவேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாத காலமாக விடுமுறையில் வீட்டில் முடங்கியவர், ஏதேனும் வருமானம் வரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் என எண்ணினார்.

தனது வீட்டின் பின்புறம் இருந்த சுமார் 5,000 சதுரஅடி இடத்தில் கத்திரிக்காய் சாகுபடி செய்யத் திட்டமிட்டார். அதன்படி வீட்டுத் தோட்டத்தில் கத்திரி விதை விட்டு, அதை இயற்கை சாகுபடி முறையில் பயிரிட்டார். 45 நாள்கள் ஆன நிலையில் தற்போது கத்திரிக்காய் மகசூல் ஈட்டத் தொடங்கியுள்ளது.

தினந்தோறும் 20 முதல் 30 கிலோ வரை கத்திரிக்காய் பறித்து விற்பனை செய்து வருகிறார். ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலான கத்திரி சாகுபடி செய்ததால் `ஆர்கானிக் கத்திரி' என்று தனது நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடவே இந்தக் கத்திரியைத் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்.

தியாகராஜனிடம் பேசினோம். ``வேலை இல்லை, வருமானம் இல்லை. என்னதான் செய்யறதுன்னு யோசித்தபோது, எனக்கு குறைந்த நாள்களில் அதிக லாபம் தரக்கூடிய கத்திரி சாகுபடி மட்டுமே ஞாபகம் வந்தது. என் வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்தில் சுமார் 5 ஆயிரம் சதுரடியில் கத்திரியை பயிரிட்டு அதை ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையிலான சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். அதன்படி சாகுபடி செய்தேன்.


தினமும் 25 முதல் 30 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். போதுமான வருமானமும் கிடைக்கிறது. இனி நான் வேலைக்குச் சென்றாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத காய்கறிகளைப் பயிரிட்டு மக்களுக்குத் தர வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்" என்றார் உற்சாகத்துடன்.

 

https://www.vikatan.com/




தற்போதைய செய்திகள்