சிலர் சளி பிடித்திருக்கும் சமயத்தில் எலுமிச்சை பழம் கலந்த உணவு, எலுமிச்சை ஜூஸ் என உட்கொள்வது தவறு என கூறுவார்கள். ஏனெனில் அது சளியை மேலும் அதிகரிக்கும் என எச்சரிப்பார்கள். இது உண்மையா..?
சில ஆய்வுத் தரவுகளை ஆராய்ந்த போது எலுமிச்சையில் வைட்டமின் C இருப்பதால் சளிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது என பரிந்துரைக்கின்றனர்.
அதாவது எலுமிச்சையில் வைட்டமின் C மட்டுமல்லாது ஆண்டி ஆக்ஸிடண்ட், ஆண்டி வைரல், ஆண்டி பாக்டீரியல் என பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
அதுமட்டுமன்றி பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதாலும் உடலுக்குத் தேவையான சில மினரல் சத்துக்களும் உள்ளதால் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது. அதேபோல் உடலின் pH அளவை சீராக்கி சமநிலைப்படுத்துவதால் சளி மற்றும் இறுமலுக்கு நல்லது.
நெஞ்சு சளி இருந்தாலும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி அதை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதோடு அரை பாதி வெங்காயமும் நறுக்கிப்போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தாங்க முடியாத நெஞ்சு சளி இருக்கும்போது ஒரு கப் குடித்து வர குணமாகும் என பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜெத்ரோ க்லோஸ் ’பேக் டு எடன்’ புத்தகத்தில் கூறியுள்ளார். இந்த குறிப்பு சைனஸிற்குக் கூட குணமாகும்.
