அந்த வகையில் உணவின் மூலம் மட்டுமன்றி இப்படி சில மூலிகை பானங்கள் அருந்துவதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். அந்தவகையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் பகிர்ந்துள்ள இரு மூலிகை பானங்கள் உங்களுக்கு உதவலாம்.
மஞ்சள் கஷாயம் :
தேவையான பொருட்கள் :
மிளகு பொடி - 1/2 tsp
எலுமிச்சை சாறு - 1/2 tsp
மஞ்சள் - 1 tspதண்ணீர் - ஒரு கிளாஸ்
செய்முறை :
தண்ணீரை சூடாக்கி அதில் மிளகுப் பொடி, மஞ்சள் கலந்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அதில் உள்ள மஞ்சளும், மிளகும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மிளகு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். கொழுப்பும் கரையும்.
மூலிகை டீ :
தேவையான பொருட்கள்
துளசி - 5-6 இலைகள்
இஞ்சி - 1/2 இஞ்ச்
ஏலக்காய் பொடி - 1 tsp
மிளகு பொடி - 1/2 tsp
சீரகம் - 1 tsp
பட்டை பொடி - 1 tsp
மஞ்சள் - 1/2 tsp
டீ தூள் - 1 tsp
வெல்லம் - 1 tsp
செய்முறை :
தண்ணீர் கொதிக்க வைத்து துளசி இலைகளை போட்டு கொதிக்க வையுங்கள். அதோடு டீ தூள், சீரகம் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் போட்டு கொதிக்க வையுங்கள். இஞ்சியை தட்டிப்போடுங்கள்.
நன்கு கொதித்ததும் வடி கட்டி குடித்துப் பாருங்கள். சளி, இறுமல் என எதுவுமே உங்களை நெருங்காது. நோய் தொற்றுகளும் நெருங்காது.
