வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது சற்று கடினமான விஷயம்தான். இருப்பினும் அதன் நன்மருத்துவ குணங்களை எண்ணி அதை சாப்பிட்டு வாருங்கள்.
வெங்காயம் உலக அளவில் பயன்படுத்தக் கூடிய பண்பட்ட உணவுப் பொருளாக உள்ளது. வெங்காயத்தை நறுக்கும்போது கண்களிலிருந்து தண்ணீர் வருவது உண்மைதான். இருந்தாலும் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எத்தனை தெரியுமா..?
இதயம் ஆரோக்கியமாக இருக்கும் : வெங்காயத்தில் வைட்டமின் சி, ஃபோலிக் ஆசிட் , நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை நிறைவாக உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். கொழுப்புச் சத்து உடனுக்குடன் கரைந்துவிடுவதால் இதயத்தின் ஆற்றல் சீராக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி : நோய் அழற்சி வேதிப்பொருட்களை கட்டுப்படுத்தி அவற்றை அழிக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. அதேபோல் செலினியம் மூலக்கூறு தூண்டப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை சுறுசுறுப்பாக்குகிற்து. எனவே நோய் தொற்று தாக்குதல்களிலிருந்து மீள வெங்காயம் சிறந்த மருந்து
அலர்ஜி நீக்கி : பருவகால தொற்று பாதிப்புகள் இருந்தாலும் அதை குணமாக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. முன்னோர்களும் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்தில் அலர்ஜி , தொற்று பாதிப்பு என்றால் ஒரு வெங்காயத்தை கடித்து மென்று சாப்பிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சளி, தொண்டை கரகரப்பு இருந்தாலும் நீங்குமாம்.
உணவின் விஷத்தன்மையை குறைக்கும் : ஆண்டி பாக்டீரியாக்கள் வெங்காயத்தில் இருப்பதால் வெங்காய சாறை மென்று சாப்பிட்டதும் ஃபுட் பாய்சன் இருந்தாலும் குணமாகும். உணவில் சமைத்து சாப்பிடுவதாலும் நன்மைகள் கிடைக்கும்.
புற்றுநோய் ஆபத்து குறைவு : புற்றுநோய் வருவதற்கான ஆபத்து தோன்றும் முன்னரே அவற்றை அழிக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. எனவே வெறுமனே வெங்காயத்தை கடித்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்துகள் வராது.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது : வெங்காயம் சாப்பிடும்போது இரத்தத்தில் இன்சுலின் அளவு சீராக பரவுகிறது. எனவே தினசரி வெங்காயம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலே சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
மனநிலை மற்றும் தூக்கம் கிடைக்கும் : மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனை தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு. எனவே வெங்காயம் சாப்பிடுவதால் எப்போதும் பாசிடிவாக இருப்பீர்கள். நிம்மதியான துக்கத்திற்கும் வெங்காயம் உதவும்.
ரத்த அடைப்பை குணமாக்கும் : உடலில் இரத்தம் உறைகிறது. கட்டிக்கொள்கிறது எனாலும் அதை சரிசெய்து இரத்த ஓட்டத்தை சீராக்க வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே குணமாகும்.
வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது சற்று கடினமான விஷயம்தான். இருப்பினும் அதன் நன்மருத்துவ குணங்களை எண்ணி அதை சாப்பிட்டு வாருங்கள். உடலில் நடக்கும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.
https://tamil.news18.com/
