குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும், புதிய ரக பாசிப்பயறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குனர் வானதி தெரிவித்ததாவது :
விவசாயிகள் குறுகிய காலத்தில், அதிகம் விளைச்சலை பெற, இந்திய பயறு வகை ஆராய்ச்சி நிலையம் விராத் (ஐபிஎம் 205-7) என்ற, புதிய பாசிபயறு ரகத்தை அறிமுகம் செய்துள்ளது
. இந்த பாசிபயறு ரகம், மிகவும் குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரும். ஒரு செடிக்கு, 35 முதல், 40 காய்கள் வரை காய்க்கும். பயிரிட்ட, 55 நாட்களில் ஒரே தடவை மொத்த அறுவடையும் செய்யலாம். இதன் விதைகளை, சூலுார், அன்னூர், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம்.
