திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மற்றும் சாணார்பட்டி வட்டாரங்களில் மூங்கில்பட்டி, சாணார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் செங்கரும்பு சாகுடி செய்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாத துவக்கத்தில் நடவு செய்யப்படும் செங்கரும்பு பயிர், 10 மாதங்களுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்வது வழக்கம். சில விவசாயிகள் ஓணம் பண்டிகையையொட்டி அறுவடையாகும் வகையில் பருவத்தை மாற்றியும் பயிர் செய்கின்றனர்.
இந்நிலையில் இப்பகுதிகளில் பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. ஆயிரகணக்கான ரூபாய் செலவழித்து, 1,500 அடி ஆழம் வரை போர்வெல் அமைத்து கிடைக்கும் தண்ணீரை கொண்டு பாசனம் செய்யும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தற்போதை காற்றால் போர்வெலில் தண்ணீர் அளவு குறைந்து வருகிறது. இதனால் பயிரை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
