நம் அனைவருக்கும் தேன், தேனீ மூலம் கிடைக்கின்றது. இவை மருத்துவச் சிறப்புகள் நிறைந்தவை. ஆனால் இத்தனை சிறப்பு மிக்க தேனை சேகரிக்க தேனீகளுக்கு முதுகெலும்பாய் விளங்குவது தாவரங்களே. ஏனெனில் தேன் உருவாக மிக முக்கியமான பொருள்கள் இரண்டு உள்ளன. அவை மதுரமும், மகரந்தமும் ஆகும். அவை பயிர்கள் மூலம் தேனீக்களுக்கு கிடைக்கின்றது. அதன் மூலம் தான் தேனீ தேனை உற்பத்தி செய்கின்றது.
மகரந்தம் தரும் பயிர்கள்:
சோளம், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தக்காளி, கத்தரி, மாதுளை, பனை, தென்னை, பாக்கு, கருவேலமரம், தீக்குச்சிமரம், ஜின்னியா மற்றும் காசித் தும்பை போன்ற பயிர்கள் தேனீக்களுக்கு மகரந்தம் தருகின்றன.
மதுரம் தரும் பயிர்கள்:
தைலமரம், புளி, வேம்பு, இரப்பர், இலவம் மற்றும் கிளரிசிடியா போன்றவை தேனீக்களுக்கு மதுரம் தருகின்றன. மேலும் காடு மற்றும் மலைப்பகுதிகளில் வளரும் கடுக்காய், அரப்பு, நாவல், செம்மரம் மற்றும் முருங்கை மரமும் மதுரம் தரும் மரங்கள் ஆகும். பழ மரங்களான லிச்சி, ஆப்பிள், பீச், பிளம், பேரி, மா, திராட்சை போன்றவையும் மதுரம் தருகின்றன.
மதுரமும் மகரந்தமும் தரும் பயிர்கள்:
அவரை, துவரை, உளுந்து, பாசிப்பயறு, காராமணி, பருத்தி, சூரியகாந்தி, எள், கடுகு, ஆமணக்கு, வாழை, எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா, முள்ளங்கி, மஞ்சள், இலைக்கோஸ், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் மற்றும் ஏலம் போன்ற பயிர்கள் மதுரம் மகரந்தம் ஆகிய இரண்çயும் தேனீக்களுக்கு தந்து உதவுகின்றன.
