தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ஆறுமுகம் தெரிவித்ததாவது : இங்கு மண், பாசனநீர் ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளிடமிருந்து மண் மற்றும் பாசனநீர் மாதிரிகள் பெறப்பட்டு குறைந்த கட்டண அடிப்படையில் மண்ணின் தன்மை, அதன் அங்கக சத்துக்கள், எந்த மாதிரியான பயிர்கள் பயிரிலடாம் எனவும், பாசனநீர் மேலாண்மை உத்திகள் வழங்குவதோடு பயிர்களுக்கு உரஅளவுகளும் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
