width:1890px height:1233px செய்திகள்

வரத்து அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை சரிவு




சேலம் மாவட்டம், தலைவாசல், ஆத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் கத்தரி பயிரிடப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்படும் காய்கள், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

திங்களன்று ஒரு கிலோ கத்தரி ரூபாய் மூன்று முதல் ஐந்து வரை விற்பனைாயனது. ஒரு மூட்டை (30 கிலோ), ரூபாய் 90 முதல் 140 வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ, ரூபாய் 10 முதல் 12 வரை விற்பனையானது.

வழக்கத்தை காட்டிலும் வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கத்தரி பயிர் செய்த விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.




தற்போதைய செய்திகள்