width:740px height:417px செய்திகள்

புதிய ஐந்து பால் பொருள்கள் ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியது




தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இந்தப் பொருள்களை அறிமுகம் செய்துவைத்தார்.

ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால்மற்றும்ஆவின் டீ மேட்பால் ஆகிய ஐந்து புதிய பொருட்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக உள்ளதாகவும், மேலும், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருவதாகவும், அந்த வகையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், ஐந்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.




தற்போதைய செய்திகள்