விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அவலூர்பேட்டை சுற்றுப்பகுதிகளில் சில தினங்களாக நல்ல மழை பொழிந்துள்ளது. இதனால் வேர்க்கடலை பயிரிட்ட விளை நிலங்களில் களைகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.
கிராம பகுதிகளில் தற்போது களை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊரடங்கினால், விவசாய பயன்பாட்டிற்கான இரும்பு பொருட்களை தயாரிக்கும் பணிகளும் நின்று போனது.
விவசாய பொருட்களை வார சந்தைகளில் , கிராம மக்கள் வாங்குவது வழக்கம். வார சந்தைகள் கடந்த 4 மாதங்களாக முடங்கியதாலும், தயாரிப்பு பணிகள் நின்றதாலும், கடைகளில் களை வெட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதால், புதிதாக களை வெட்டிகள் கடைகளில் விற்பனைக்கு வந்தது. இதை தொடர்ந்து, களைகளை கொத்தி எடுப்பதற்கான களை வெட்டிகள் அவலூர்பேட்டை கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ரூ.70 முதல் 80 வரையில் விற்பனை செய்யப்படும் களைவெட்டிகளை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.
