width:784px height:523px செய்திகள்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலை கண்காணித்திட திடல் வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் குறித்து அமைக்கப்பட்டுள்ள பூச்சிநோய் கண்காணிப்பு திடல் மற்றும் வரப்பு பயிர் சாகுபடி குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை வட்டாரத்தில் குப்பயன்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கன் படைப்புழு மக்காச்சோளப் படைப்புழு கண்காணிப்பு திடலை ஆய்வு செய்தார்கள். அப்பொழுது விவசாயிகள் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை கண்காணித்திடும் வயலில் மக்காச்சோளப்பயிரில் அமைக்கப்பட்டிருந்த சூரிய விளக்குப் பொறி மற்றும் இனக்கவர்ச்சிப் பொறி ஆகியவற்றை பார்வை இட்டார். அப்போது விவசாயிகளுக்கு மக்காச் சோளப்பயிரில் அமெரிக்கப் படைப்புழுவைக் கட்டுப்படுத்திட பூச்சி மேலாண்மை உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினார். மேலும் வண்ணாரப்பட்டி கிராமத்தில் தயோமெத்தோசம் என்ற மருந்தை 1 கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யப்பட்டு விதைக்க வேண்டும் எனவும், மக்காசோளப்பயிரில் வரப்பு பயிரான தட்டைப்பயறு சாகுபடி செய்திடவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். விவசாயி வயலில் வரப்பு பயிர் சாகுபடி செய்வதை ஆய்வு மேற்கொண்டார்.

அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்திட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) எஸ்.இராஜசேகரன், புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், பொ.செல்வி, வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) எஸ்.முகமது ரபி, வேளாண்மை அலுவலர், சி. கருப்பையா ஆகியோர் உடன் இருந்தனர். கள ஆய்வுக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர், பாண்டிசெல்வி, அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்று பயனடைய வேளாண்மை இணை இயக்குநர் கேட்டுக் கொண்டார்.




தற்போதைய செய்திகள்