திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன ரம்யா வெயிளிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு, கொங்கல்நகரம், அனிக்கடவு கிராம விவசாயிகள், வாழைக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஹெக்டேருக்கு, ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 348க்கு, ரூ.10,917 பிரிமீயம் தொகை செலுத்த வேண்டும்.
கொண்டம்பட்டி, ஆமந்தகடவு, குடிமங்கலம், பூளவாடி, வடுகபாளையம், குப்பம்பாளையம், பொன்னேரி, கோட்டமங்கலம், புக்குளம், இலுப்பநகரம், சோமவாரப்பட்டி, அனிக்கடவு, மூங்கில்தொழுவு, கொங்கல்நகரம், பண்ணைக்கிணறு, முக்கூடு ஜல்லிபட்டி, தொட்டம்பட்டி, புதுப்பாளையம் மற்றும் விருகல்பட்டி கிராம விவசாயிகள், சின்ன வெங்காயத்துக்கு, பயிர் காப்பீடு செய்யலாம்.
இச்சாகுபடிக்கு, ஒரு ஹெக்டேருக்கு, ரூபாய் 1 லட்சத்து, 4 ஆயிரத்து, 358க்கு, ரூ.5,218 பிரிமீயம் தொகை செலுத்த வேண்டும். இதே போல், அனிக்கடவு பகுதியில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள், ஒரு ஹெக்டேருக்கு, ரூ.75,025க்கு, ரூ.3,501 பிரிமீயமாகும்.
காப்பீட்டு திட்டத்தில், பயன்பெற, விருப்பமுள்ள விவசாயிகள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, நடப்பாண்டில் உள்ள வங்கி சேமிப்புக்கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், அடங்கல், விதைப்புச்சான்றிதழ் போன்ற ஆவணங்களுடன், பொது சேவை மையம் மூலம் பிரிமீயம் தொகை செலுத்தலாம்.
இடர்பாடு ஏற்படும் காலங்களில், உரிய காப்பீட்டுத்தொகை பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் 94861-48557, தோட்டக்கலைத்துறை அலுவலர் 98650-75473, உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், 88836-10449, 99762-67323 என்ற எண்களிலும், தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
