width:1000px height:667px செய்திகள்

சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு




தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து பயன்பெற, பென்னாகரம் வேளாண் துறை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பென்னாகரம் வேளாண் துறை உதவி இயக்குனர் புவனேஷ்வரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  பென்னாகரம் பகுதி விவசாயிகள் அனைவரும், நீர் சிக்கனம் கருதி, சொட்டு நீர் பாசனம் முறையாக அமைத்து, சாகுபடி செய்ய வேண்டும். இதில், பயிரின் வேருக்கு நேரடியாக நீர் செல்வதால், பயிரின் நீர் தேவை குறைகிறது.

இதனால், 75 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம். இம்முறையில், மண் அரிமானம், களைகளில் வளர்ச்சி கட்டுபடுத்தப்படுகிறது. சொட்டுநீர் பாசன முறையில், உர விரயம் தடுக்கப்படுகிறது. இதனால், உரச்செலவும் குறைகிறது.

எனவே, விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைக்க, சிட்டா, அடங்கல், புகைப்படம், நில வரைபடம், ஆதார் எண், மண்வள அட்டை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகியவற்றை, நகல்களுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஐந்து ஏக்கருக்குள் உள்ள விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், அதற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்