width:640px height:400px விவசாயம்

மானியத்துடன் நீர்பாசன கடன் பெற விண்ணப்பிக்கலாம்




சிறு, குறு விவசாயிகள் மானியத்துடன் கூடிய நீர் பாசன கடன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளின் நீர் பாசன வசதிக்காக, புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி அமைக்க அதிகபட்சம், 50 சதவீத மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு லட்சம் ரூபாய் வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான, 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம், ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சிறு, குறு விவசாயி என்பதற்கான தாசில்தாரிடம் பெறப்பட்ட சான்று, நில உடமைக்கு ஆதாரமான கணினி வழிபட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Site For Sale Contact : 9894832938