நம் நாட்டில். கிராமப் பகுதியில் வாழும் மக்கள் தங்களது மாமிசத் தேவைக்காகவும் மற்றும் வருமானத்தை பெருக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும் ஆடு வளர்ப்பு தொழிலில் அதிகமாக ஆர்வம் காடடி வருகிறார்கள்ஃ ஆடு வளர்ப்பானது நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழை பெண்களுக்கும் சுய வேலைவாய்பளிப்பதுடன் நிரந்தர வருவாய் தரும் சிறந்த தொழிலாக விளங்குகிறது.
ஆடுகள் அதிக வெப்பத்தையும், வறட்சியான சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியவை. மேலும் ஆடுகள் குறுகிய காலத்தில் இனவிருத்திக்கு தயாராகிவிடும். ஆடுகள் கிராமபுற மக்களின் வாழ்வாதாரத்திற்;கு பெரிதும் உறுதுணையாக இருப்பதால் இதை ஏழைகளின் நடமாடும் வங்கி என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட ஆடுகள் மழைக்காலங்களிலும், பனிக்காலங்களிலும் தளிர் இலைகளையும், புற்களையும் உண்ணும் பொழுது செரிமாகக் கோளாறு ஏற்படும். பழக்கமில்லாத புதிய புற்களைத் தின்னும் பொழுதும், விரயமான காய்கறிகளைக் கொடுக்கும் பொழுதும் செரிமானக் கோளாறு ஏற்படும். வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுதும் செரிமானக் கோளாறு ஏற்படும். செரிமான கோளாறு எதனால் ஏற்படுகிறது அதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.
செரிமான கோளாறு ஏற்ப்பட்ட ஆடுகளில் காணப்படும் அறிகுறிகள்
வயிறு உப்புசம் ஏற்படும் மற்றும் ஆடுகள் உற்சாகமின்றி காணப்படும்
பல்லை அடிக்கடி கடித்துக்கொள்ளும்
பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை மாறி மாறி வைத்துக்கொள்ளும்
இடது பக்க வயிறு வலதுபக்கத்தை விட பெருத்து இருக்கும்
உப்புசத்தால் மூச்சு திணறும்
மூச்சு விடும்போது நாக்கை வெளியில்தள்ளிக்கொள்ளும். தலையையும் கழுத்தையும் முன்னோக்கி வைத்துக்கொள்ளும்.
வயிறு உப்புசத்தை சாமாளிக்கும் முறைகள்
அருகிலுள்ள கால்நடை மருத்தவரை அனுகி உடன் சிகிச்சை செய்து கொள்ளலாம். இல்லாது போனால் நீங்களே முதல் உதவியாக 50 முதல் 100 மில்லி கடலை எண்ணெய் , நல்லெண்ணெய் போன்றவைகளை வாய்வழியாக கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கும் போது புரை ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை செய்து கொள்வது மிகவும் அவசியமாகும்.
தடுப்புமுறைகள்
மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும்; அதிக நேரம் மேயாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தீவனத்துடன் அதிகம் நொதிக்ககூடிய மாவுப்பொருளைச் சேர்க்ககூடாது.
போதுமான அளவுக்கு காய்ந்த புல் தரவேண்டும்.
.
வயிறு உப்புசத்தக்கான வேறு காரயங்கள்
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய் பொன்ற காய்கறிகள் உணவுக் குழாயில் சிக்கி வயிற்றிலிருந்த காற்று வெளியே வரமுடியாமல் வயிறு உப்புசம் ஏற்படுகிறது. அதற்கு முதல் உதவியாக சுமார் 5 மிலி எண்ணெய் கொடுக்கவேண்டும். உணவுக்குழாயில் இது வழவழப்பை ஏற்படுத்தி அடைப்பட்ட பொருள் உள்ளே செல்வதற்கு வாய்ப்பு உண்டாகலாம்.
டெட்டானஸ், லிஸ்ட்டிரியோசிஸ் போன்ற நோய்கள் ஆடுகளைத்தாக்கும் பொழுது உப்புசம் ஏற்படுகிறது. இவைகளை எளிதில் குணப்படுத்த முடியாது.
ஆடுகளில் ஏற்படும் செரிமானக் கோளாறுகள்
குட்டிகள்
இளம்குட்டிகள் தாயிடம் சிறுகச் சிறுகப் பால் குடிக்கும் பொழுது, பால் வாயில் உள்ள உமிழ் நீறுடுன் நன்றாக கலப்பதால் எளிதில் ஜீரணம் அடைகிறது. ஆனால் புட்டிப்பால் கொடுக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதோ அல்லது அடிக்கடி கொடுப்பதோ சாத்தியம் இல்லை. பசி அதிகம் இருக்க வாய்ப்புண்டு. மேலும் பாலின் தரமும் கெட்டு விட வாய்ப்புண்டு. இதனால் ஜீரணம் பாதிக்கப்பட்டு வயிறு உப்புசம் மற்றும் கழிச்சல் உண்டாகும். வயிறு உப்புசத்தால் பாதிக்கப்பட்ட குட்டிகளை உடனடியாக கவனிக்கவேண்டும். இல்லையேல் இறந்து விடும்.
இதற்கு முதல் உதவியாக ஒரு ஸ்பூன் எண்ணெய் கொடுக்கலாம். வயிறு உப்புசத்தை தடுத்திட திடமான பாலைக் கொடுக்கக்கூடாது. பால் பாதி நீர் பாதி என கலந்து கொடுக்கலாம். மேலும் ஒரே மாட்டு பாலாக இருந்தால் மிகவும் நல்லது. பொதுவாக இளங்குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
இந்த சுல்நிலையில் கழிச்சல் போன்ற ஜீரணக் கோளாறுகளால் பலவீனம் அடைவதால் சளி, இருமல் போன்ற நோய்களால் பாதிக்கப்படும். எனவே தொடர் கழிச்சல் மற்ற றோய்களுக்கு எளிதில் வழிவகுத்துவிடும்.
ஆடுகள் பெரிய ஆடுகள் தரமில்லாத தீவனத்தை தின்னும் போது, கெட்டுப் போன காளான் முளைத்த தீவனத்தைத் திண்பதாலும் மற்றும் தீவனத்தை திடிர் என்று மாற்றுவதாலும் ஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் போதுமான அளவு தண்ணீர் கொடுக்கா விட்டாலும் ஜீரணக்கோளாறுகள் உண்டாகும். எப்பொழுதும் தீவன மாற்றம் செய்யும் போது படிப்படியாக மாற்றம் செய்யவேண்டும்.
விஷச்செடியினால் உண்டாகும் ஜூரணக்கொளாறுகள் ஆடுகள் மேம்புல் மேய்வது, நிறைய செடிகொடிகளை மேய்வது எல்லோருக்கும் தெரிந்ததே. அவ்வாறு மேயும்போது தீங்கு விளைவிக்கக்கூடிய விஷச்செடிகளையும் மேய்ந்துவிடும். ஏற்கனவெ மேய்ந்து பெரும்பகுதி வயிறு நிரம்பிய பிறகு, கொஞ்சம் விசச்செடியை தின்றால் ஒன்றும் செய்யாது.
வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள் விசத்தின் தன்மையை முறித்துவிடும். ஆனால் வெறும் வயிற்றில் விஷச்செடியை தின்றுவிட்டால் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதில் உடனே தாக்கக்கூடிய விசம், மெதுவாக தாக்கக்கூடிய விசம் என இரண்டு வகை இருக்கிறது. சில விஷச்செடிகள் பச்சையாக இருக்கும் பொழுது பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால் அதுவே காய்ந்த நிலையில் இருக்கும் போது பாதிப்பை ஏற்படுத்தும்.
விஷச்செடியால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் காணப்படும் அறிகுறிகள் கழிச்சல், வயிறு உப்புசம், புழுக்கை பொடாமை, வலிப்பு, தோலின் முடி கொட்டுதல் மற்றும் அரிப்பு, புண் ஏற்படுதல், சோகை, ரத்தக்கசிவ, சிறுநீரில் மாற்றம், வாந்தி மற்றும் வயிறு வீக்கம் காணப்படும். இதற்கு முதல் உதவியாக இது நச்சுசெடி என்று தெரிந்தால்
அதிலிருந்து ஆடுகளை அப்புறப்படுத்தவேண்டும்
தேயிலை காய்ச்சிய நீரை 100 மிலி கொடுக்கவேண்டும்
பாரபின் திரவம் 50 மிலி கொடுக்கலாம்
மட்டை, பால் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து 50 – 100 மிலி கொடுக்கலாம்
துள்ளுமாரி நோய் இந்த நோயைப் பொருத்த வரை பெரிய அளவில் பண்ணை வைத்திருப்போர் கவனமாக இருக்கவெண்டும். ஏனெனில் இக்கிருமிகள் அதிக அளவில் இறப்பை ஏற்படுத்தும். மழைக்கு பிறகு கொழுந்து விட்ட ஈரமான புற்களை மேயும்போதும், தானிய வகைகளை உட்கொள்ளும்போதும் ஏற்கனவே சிறுகுடலில் இருக்கும் கிளாஸ்ட்ரியம் பர்பெஞ்சியம் டி வகையைச் சார்ந்த நுண்ணுயிரிகள் எண்ணிக்கையில் அதிகரித்து விஷத்தை கக்குவதால் அது இரத்ததில் கலந்து இதயம், நுரையீரல் மற்றும் மூலையையும் பாதிக்கிறது. வயிறு உப்பி சிலசமயங்களில் இறப்பபை ஏற்படுத்தும்.
நோய் அறிகுறிகள்
மிகவும் பாதிக்கப்பட்ட ஆடுகளில் வலிப்பு ஏற்ப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.
மஞ்சள் கலந்த பச்சை நிற கழிச்சல், மிகவும் தண்ணீர் போலவும் சளியுடன் இரத்தமும் கலந்து வரும்.
வயிறு உப்பி காணப்படும்
கடுமையான வயிற்று வலி இருக்கும்
உடல் சில்லிட்டு விடும்
படுத்துவிடும
படுத்தக் கொண்டு காலை முன்னும் பின்னும் ஆட்டுவதும், தரையில் தலையை துhக்கி அடித்துக்கொண்டு இறந்தவிடும். இந்நோயை கட்டுப்படுத்த தடுப்பு முறையே சிறந்தது. தடுப்பூசி போடலாம். மேலும் தீவனமாற்றத்தை படிப்படியாக செய்யவேண்டும். மழைக்கு பிறகு கொழுந்துவிட்டு வரும் தளிர்ப்புல்லை அதிகாலையில் மேயவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ந.ராணி, ரா.தினேஷ்குமார் மற்றும் கு.பொன்னுதுரை
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கருர்
