width:740px height:417px செய்திகள்

முருங்கை இலையில் நோய் எதிர்ப்பு சக்தி




முருங்கை இலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது என, பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய இணைய வழிக்கருத்தரங்கில் மதுரை சமூக அறிவியல் கல்லூரி பேராசிரியை விஜயலட்சுமி பேசினர்.

முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என்ற தலைப்பில் பேராசிரியை பேசியதாவது : முருங்கை இலையில் தாது உப்பு, உயிர் சத்துக்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இணை உணவாக கொள்ளலாம். மேலும், முருங்கை இலை பவுடராகவும், அழகு சாதனங்களாக பயன்படுத்துவதால் தோல் சுருக்கம் தாமதமாகும்.

 

குழந்தைகளை சிறு வயது முதல் கீரை சாப்பிட பழக்க வேண்டும். பவுடரை சப்பாத்தி, அடை, சிறுதானியங்களில் சேர்த்து கொள்வது சிறப்பு. பேக்கரி, குக்கீஸ் வகையிலும், வீரர்களுக்கு எனர்ஜி டிரிங்ஸ் ஆகவும் பயன்படுத்தலாம் என்றார்.




தற்போதைய செய்திகள்