width:830px height:470px செய்திகள்

வரும் 31க்குள் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம்




வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகின்ற 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில், பல ரகங்களில் வாழைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அவை, இயற்கை சீற்றங்களால், அவ்வப்போது, வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். எனவே, வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளை, காப்பீடு செய்ய வைக்கும் பணிகளில், தோட்டக்கலை துறையினர் கவனம் செலுத்துகின்றனர். தற்போது, பல்வேறு மாவட்டங்களில், வாழை சாகுபடி துவங்கியுள்ளது. இவ்வாறு, வாழை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, ரூ.3,211 கட்டணம் செலுத்தி, வருகின்ற 31ம் தேதிக்குள், பயிர் காப்பீடு செய்ய, கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

பயிர் கடன் பெற்ற விவசாயிகள், வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள், அரசின் பொது சேவை மையங்களிலும், ஆன்லைன் வாயிலாக பிரீமிய தொகை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 




தற்போதைய செய்திகள்