width:868px height:380px செய்திகள்

வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதல்




தாழங்குணம் கிராமத்தில் வேர்க்கடலை விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேர்க்கடலை செடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த தாழங்குணம் கிராமத்தில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் உதவி வேளாண் அலுவலர் சக்திவேல் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி கூறியதாவது :

மேல்மலையனூர் வட்டாரத்தில் 15,000 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, செடிகளில் இலைப்பேன், பச்சை தத்து, இலை சுருள்பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.

எனவே, விவசாயிகள் பூச்சி தாக்குதல்களிலிருந்து வேர்க்கடலை பயிர்களை பாதுகாத்திட தையோமெத்கசோம் 50 கிராம், மைக்ரோ சல்பர் 30 கிராம் , 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வந்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் அல்லது புரோபினோபாஸ் 250 மில்லி, மைக்ரோ சல்பர் 300 கிராம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வந்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என்றார்.




தற்போதைய செய்திகள்