width:1040px height:780px செய்திகள்

கடலை செடியில் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்




மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் கடலை செடியில் மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் மதுரைசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது : கொட்டாம்பட்டி பகுதியில் 1250 ஏக்கரில் கடலை பயிரிடப்பட்டுள்ளது. இச்செடிகளில் புகையிலை, அமெரிக்கன் காய்புழு, சுருள் பூச்சி தாக்கியுள்ளது. இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும் சுருள் பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் மருந்தை ஏக்கருக்கு 250 மி.லி., வீதம் தெளிக்கலாம்.

இலை மொட்டு மற்றும் பூக்களை அழிக்கும் அமெரிக்கன் காய்புழுவை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு இமிடாகுளோபிரிட் 2 மி.லி., வீதம் தெளிக்கலாம். மேலும், இலைகளை அழிக்கும் புகையிலை வெட்டுப்புழுவை கட்டுப்படுத்த ஆமணக்கை வரப்பு பயிராக சாகுபடி செய்தால் நோய் தாக்குதல் குறையும். விளக்கு பொறி வைத்து தாய் பூச்சிகளை அழிக்கலாம். இளம் பூச்சிகளை அழிக்க வேப்ப எண்ணெய் 2 சதம் அல்லது என்.பி.வி., கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம், என்றார்.




தற்போதைய செய்திகள்