width:710px height:400px செய்திகள்

திராட்சை சாகுபடிக்கு மாறும் வாழை விவசாயிகள்




கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.

தேனி மாவட்டம், கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திராட்சை, வாழை, தென்னை உள்ளிட்ட தோட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது வாழை விவசாயம் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர்ந்து வாழை விவசாயம் செய்ய முடியாமல் தற்போது திராட்சை சாகுபடி செய்ய நிலத்தை பண்படுத்தி வருகிறார்கள்.

இதுபற்றி திராட்சை விவசாயி ஒருவர் கூறியதாவது, ஒரு சில சீசன்களில் வாழை விவசாயம் விவசாயிகளுக்கு போதுமான அளவு வருமானத்தை கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் பன்னீர் திராட்சை விவசாயம், விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. தற்போது பன்னீர் திராட்சை, முதல் ரகம் கிலோ ரூ.50, இரண்டாம் தரம் கிலோ ரூ.45 வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் இரண்டு மடங்காக விலையை நிர்ணயிப்பார்கள். தற்போதைய கொள்முதல் விலை திராட்சை பயிரிடும் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு சாதகமாக உள்ளது என்றார்.

 




தற்போதைய செய்திகள்