width:1280px height:720px செய்திகள்

வெள்ளிமலை பகுதியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம்




வெள்ளிமலை ஒன்றியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வெள்ளிமலை ஒன்றியத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, வெங்காயம் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க ஏற்கனவே சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அரசு வழங்குகிறது.

இதில், விவசாயிகளுக்கு கூடுதலாக குழாய்களை அமைக்க பள்ளம் எடுப்பதற்கு அதிகளவில் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனையொட்டி குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் பள்ளம் எடுப்பதற்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம் அதிகபட்சமாக

ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டர் அளவிற்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது. எனவே, சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் பதிவின் போது தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வாய்ப்பினை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தற்போதைய செய்திகள்