அபிசேகப்பட்டி கால்நடைப் பண்ணையில் வருகிற 14ம் தேதி ஆடுகள் ஏலம் நடைபெற உள்ளன.
இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அபிசேகப்பட்டி மாவட்ட கால்நடைப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு கழிவு செய்யப்பட்ட 22 கீழக்கரிசல் ஆடுகள், 78 கன்னிஆடுகள், 13 எல்டபிள்யூ வெண் பன்றிகள் ஆகியன வருகிற 14ம் தேதி காலை 11 மணிக்கு பகிரங்க ஏலம் மூலம் பண்ணை வளாகத்தில் வைத்து விற்பனை செய்யப்பட உள்ளன.
ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள், டேவணித் தொகையாக ரூ.2000க்கான தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையை வருகிற 10ம் தேதி மாலை 4 மணிக்குள் மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கி வரைவோலை துணை இயக்குநர், மாவட்ட கால்நடைப் பண்ணை, அபிசேகப்பட்டி என்ற முகவரிக்கு எடுக்கப்பட வேண்டும். டேவணித் தொகை வங்கி வரைவோலையாக மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கால்நடைப் பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0462-2338759 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள் கால்நடை பராமரிப்புத் துறையின் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் அலுவலகம், அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளளலாம்.
