மாநிலம் முழுவதும், 30,000 விதை மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என சான்றளிப்புத் துறை இயக்குனர் தெரிவித்தார்.
ஊட்டியில், விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையினர், விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட, விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை இயக்குனர் சுப்பையா தெரிவித்ததாவது : தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, விதை சான்றளிப்பு துறை இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் இதுவரை, 30,721 விதை மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில், 454 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு, அந்த விதைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது. விற்பனை நிலையங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரட், பீட்ரூட் விதைகள் விலை நிர்ணயம் செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பிரதம மந்திரியின் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பயிர் என்ற திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்திற்கு கேரட் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், தரமான கேரட் விதை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விற்பனை நிலையங்களிலிருந்து கேரட் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு நஞ்சநாடு தோட்டக்கலை பண்ணையில் வளர்க்கப்படுகிறது. குணாதிசயங்கள் மாறுப்பட்டால், நடவடிக்கை எடுப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
