வேடசந்தூரில் மானாவாரி விவசாயத்தில் கடலை பயிர் செழிப்பாக வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தி்ண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஆடிப்பட்டத்தை முன்னிட்டு மானாவாரியில் விவசாயிகள் நிலக்கடலை விதைப்பு செய்துள்ளனர். தொடர் மழை பெய்ததால் கடந்த மாதம் விதைத்த பின்னர் 20 நாட்களாக மழை இல்லை. இதனால் கடலை பயிர் வாடியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்கிறது. தற்போது கடலை செடிகள் நன்கு பச்சை பசேலென செழுமையாக உள்ளன. இதே நிலை நீடித்தால் நடப்பு சாகுபடி பருவத்தில் மானாவாரி விவசாயம் கை கொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
