width:600px height:413px செய்திகள்

மக்காச்சோள சாகுபடியில் படைப்புழு மேலாண்மை




அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டார விவசாயிகள் படைப்புழுவைத் தடுக்கும் வழிமுறைகள் அறிந்து பயன் பெறலாம் என வட்டார வேளாண்மை உதவு இயக்குநர் ஆர்.லதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது : திருமானூர் வட்டாரத்தில் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்குதலினால் அதிக மகசூல் இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில் படைப்புழு வராமல் தடுக்க

, கடைசி உழவுக்குப் பின் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவும், ஒவ்வொரு 10 வரிசைகளுக்கும் 75 சென்டி மீட்டர் இடைவெளி விட்டு விதைக்கவும், இதுபோன்று ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் பெவேரியா பேசியானா அல்லது 10 கிராம் தயாமிதாக்சோம் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கவும், வரப்புப் பயிர்களாக தட்டைப்பயிறு, சூரியகாந்தி, சாமந்தி, எள் போன்றவைகளை சாகுபடி செய்யலாம் எனவும், ஊடுபயிர்களாக உளுந்து, பாசிப்பயிறு ஆகியவற்றை சாகுபடி செய்து படைப்புழு வராமல் தடுத்து மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்