width:1778px height:1183px மேலாண்மை பயிற்சி

வரும் 22ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி




திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியானது ஆன்லைன்/நிகழ்நிலை மூலம் நடைபெற உள்ளது. பயிற்சிக்கான நேரம் காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆண்ட்ராய்டு/ஸ்மார் போனின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கீழ்காணும் அலுவலக எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். இந்த பயிற்சிக்கான இணைப்பு பயிற்சி நடைபெறும் 22.9.2020 (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் தங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பப்படும். அந்த லிங்க்கை கிளிக் செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, இணை பேராசிரியர் மற்றும் தலைவர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புறவழிசாலை ரோடு, வடஆண்டாபட்டு, திருவண்ணாமலை – 606 604, தொடர்புக்கு 04175 – 298258, 95514 19375 தொடர்பு கொள்ளலாம்.




தற்போதைய செய்திகள்