திருவாடானை அருகே திருவெற்றியூர், உசிலனக்கோட்டை உள்ளிட்ட சில கிராமங்களில் ஆடு, மாடுகளை நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து உசிலனக்கோட்டையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது : இப்பகுதியில் பசு வளர்ப்போர் அதிகம். சில நாட்களாக உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு மாடுகள் சோர்வாக உள்ளது. இதனால் பால் குறைவாக கொடுக்கிறது. ஆடுகளை நோய் தாக்கி பிரசவத்தின் போது குட்டிகள் இறக்கிறது. மேலும், திருவெற்றியூர் கால்நடை மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல், திருவாடானை, தொண்டியில் உள்ள மருந்துகடைகளில் மருந்து வாங்கி கொடுக்கிறோம்.
எனவே, கிராமங்கள் தோறும் முகாம் நடத்தி கால்நடைகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
