width:px height:px விவசாயம்

பண்ணை குட்டையில் விரால் மீன் வளர்ப்பு




நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன் வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் கீழ்வேளுர் வட்டாரம் , பசுக்கிடைவெளி கிராமத்தில் மீன்குட்டையில் விரால் மீன் வளர்ப்பு குறித்து முதல் நிலை செயல் விளக்கம் மேற்கொள்ளப்பட்டது.

 

வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். அ. கோபாலக்கண்ணன் தேர்வு செய்யப்பட்ட விறால் மீன் குஞ்சுகளை குட்டையில் இருப்பு செய்து தொடங்கி வைத்தார். இதில், விரால் மீனானது சுவை மிகுந்ததாகவும் சந்தை வாய்ப்புகள் அதிகம் கொண்டதாகவும் நன்னீர் மீன் வளர்ப்பில் சிறந்தாக உள்ளது எனவும் கூறினார். மேலும், அறிவியல் முறையில் விவசாயிகள் விரால் மீன் வளர்ப்பு மேற்கொள்ளாததால் அதனுடைய உற்பத்தி திறனை அறிய முடியா நிலை உருவாகிறது. எனவே அறிவியல் முறையில் விரால் மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் விவசாயி களிடையே கொண்டு செல்ல ஏதுவாக முதல் நிலை செயல் விளக்கம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். வேளாண்மை அறிவியல் நிலைய மீன்வள விரிவாக்க தொழில் நுட்ப வல்லுநர் ஹினோ பர்னாண்டோ, சிறிய வகை மீன்குஞ்சுகளை குளத்தில் இருப்பு செய்யும் போது மற்ற வளர்ந்த மீன்கள் இதனை அடித்து சாப்பிடும் ஆபத்தினை தவிர்க்க நன்றாக வளர்ந்த, 20 செ.மீ நீளம் உள்ள, சுமார் 95 கிராம் எடையுள்ள மீன் குஞ்சுகளை இருப்பு செய்ய வேண்டும். இதன் மூலம் 90 முதல் 95 சதவீதம் வரை பிழைப்புதிறன் அதிகரிக்கப்படுகிறது. மேலும், இம்முறை யில் ஆறு மாத காலத்தில் ஏக்கருக்கு 1 டன் மகசூல் கிடைப்பதால் முறையானது மீன் விவசாயிகளுக்கு அதிக வருவாய் ஈட்ட ஏதுவான தொழில் நுட்பமாக விளங்குகிறது என்று கூறினார்.

மேலும், இச்செயல் விளக்கமானது வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளால் தொடர்ந்து விரால் மீனின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு மகசூல் திறன் கணக்கிடப்படும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

 




Site For Sale Contact : 9894832938